திருவிடைமருதூர் தொகுதி: அதிமுக சார்பில் வீரமணி போட்டி
திருவிடைமருதூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் எஸ்.வீரமணி போட்டி;
திருவிடைமருதூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் பெயர் எஸ்.வீரமணி (58), தந்தை சாந்தன், தாய் அஞ்சலையம்மாள். மனைவி அமிர்தவள்ளி. மகன்கள் அருண், பிரகாஷ், மகள் அனிதா. தத்துவாஞ்சேரியை சேர்ந்தவர். டிப்ளமோ எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர் படித்துள்ளார்.
ஊரக வளர்ச்சி துறையில் எழுத்தாளராக 15 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார். 1991ல் தத்துவாஞ்சேரி கிளைச் செயலாளர். 1996 அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர், 2020 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு போட்டியிட்டு தோல்விடைந்தார். 1985 லிருந்து அதிமுகவில் உள்ளார்.