கும்பகோணம் அருகே சாலை விபத்து: ஒருவர் பலி ஒருவர் படுகாயம்
கும்பகோணம் அருகே நடத்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்;
கும்பகோணம் அருகே கோவனுரில் அஜித் என்பவர் பழக்கடையில் பழம் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அவ்வழியாக விறகு ஏற்றி வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் அஜித் சம்பவ இடத்திலேயே இறந்தார். சாலையில் நின்று கொண்டிருந்த அருமைச் செல்வி காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை சென்றனர்.