ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில் திருநடன திருவிழா
திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் அமைந்துள்ள மதுர காளியம்மன் கோவில் திருநடன திருவிழா நடைபெற்றது.;
திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை கஞ்சான் மேட்டுத்தெருவில் அமைந்துள்ள மதுர காளியம்மன் கோவில் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. இத்தலத்தில் 93வது ஆண்டு திருநடன திருவிழா கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.
மதுரகாளியம்மன் திருநடனத்துடன் பவனி வரும் வீதிகளில், ஒவ்வொரு குடும்பத்தினரும், மாவிளக்கு ஏற்றிவைத்து, தட்டில் பழங்கள், தேங்காய் மலர்சரங்கள், வளையல், தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் மதுர காளியம்மனை தண்ணீர் நிரப்பிய சொம்பில் வேப்பிலை சொருகி வைத்து, பாதங்களை அபிஷேகம் செய்வித்தும், தங்கள் வீடுகளுக்கு வரவேற்றனர். தொடர்ந்து வரும் ஏப்ரல் 08ம் தேதி அம்பாள் ஊஞ்சல் திருவிழாவும், 10ம் தேதி வீரசோழ ஆற்றங்கரையில் 1008 பால்குட ஊர்வலம், அலகு காவடிகளுடன் வந்து, மதுரகாளியம்மனுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்ற பிறகு தயிர் பள்ளயம் இடப்பட்டு பக்தர்களுக்கு அன்னபிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.