பந்தநல்லூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது
பந்தநல்லூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா, பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையில், எஸ்எஸ்ஐ மதியழகன், ராஜராஜசோழன், காவலர் பிரபாகரன் ஆகியோர் கொண்ட தனிப்படை பந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மணல் திருட்டு, சாராயம், கஞ்சா, புகையிலை வைத்திருத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று திட்டச்சேரி கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு அருகில் மனக்குண்ணம் பகுதியை சேர்ந்த பன்னீர் (38), சிவகுமார் (35) திட்டச்சேரி சேர்ந்த பழனி (48), வேட்டமங்கலம் பகுதியை சேர்ந்த மணிவாசகம் (22) ஆகிய நான்கு நபர்கள் இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை வைத்து பந்தநல்லூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்களை தனிப்படையினர் கைது செய்தனர்.