கம்பகரேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர கொடியேற்றம்

Update: 2021-03-19 09:15 GMT

கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருநாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலின் பங்குனி உத்திர திருநாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.முன்னதாக கோயிலில் உள்ள பெரிய கொடிமரத்திற்கு பால், சந்தனம், தேன், இளநீர், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், சுவாமி ,அம்பாள், வள்ளி, தேவசேனா சமேத முருகப்பெருமான் சண்டிகேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள ரிஷப கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

மேலும் பஞ்சமூர்த்திகளுக்கு தீபாராதனை நடந்தது. இதில் தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 23ம் தேதி சகோபுர தரிசனமும் 25ம் தேதி திருக்கல்யாண பிரம்மோற்சவம் 26 ஆம் தேதி ரதா ரோஹணமும் 27 ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வும் 28ஆம் தேதி காவிரியில் தீர்த்தவாரி நிகழ்வும் தொடர்ந்து ஏப்ரல் 4ஆம் தேதி ஸ்ரீ சரபேஸ்வரர் ஏகதின உற்சவமும் சரப மூர்த்தி சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது.

Tags:    

Similar News