திமுக கவுன்சிலர்கள் கடத்தல்? ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
திமுக கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக எழுந்த புகாரால் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.;
ஆடுதுறையில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக வந்த புகாரால் பேரூராட்சி அலுவலகத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் திமுக கவுன்சிலர்கள் கடத்தப்பட்டதாக திமுக தரப்பினர் தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசனிடம் புகார் அளித்தனர். பா.ம.க. நான்கு பேர், அதிமுக இரண்டு பேர், சுயேச்சை இரண்டு பேர் ஆகிய எட்டு பேர் மட்டும் அலுவலகத்தின் உள்ளேயே அமர்ந்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் இளவரசன் அறிவித்துள்ளார்.