கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்;

Update: 2022-02-15 17:15 GMT

திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் புதிதாக குடிநீர் திட்டம் தொடங்குவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் புதிதாக ஒரு ராட்சச ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் திட்டம் தொடங்குவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10-ந்தேதி திருச்சென்னம்பூண்டி கிராமத்தில் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் கிராமத்தில் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பேராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில் புதிய குடிநீர் திட்டம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருச்சென்னம்பூண்டி ஊருக்குள் நுழையும் இடத்தில் பெரிய கருப்புக்கொடியை ஏற்றி வைத்திருந்தனர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தஞ்சை மாவட்ட குழு உறுப்பினர் வக்கீல் ஜீவகுமார், திருச்சென்னம்பூண்டி ராஜேந்திரன், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த ரெங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது புதிய குடிநீர் திட்ட பணிகளை நிறுத்தாவிட்டால் பூதலூர் தாலுகா அலுவலகத்திலும், தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் போராட்டம் நடத்தப்படும் என்று கிராமமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News