முன்னாள் அமைச்சரின் நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமானநிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கப்பட்ட ஏலத்தை ரத்துசெய்யவலியுறுத்தி சாலைமறியல்;
முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு முறைகேடாக வழங்கப்பட்ட ரூ. 520 கோடிக்கணக்கான ஏலத்தை ரத்து செய்து, மீண்டும் தகுதி வாய்ந்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர், கும்பகோணம், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாலைகள் அமைத்தல், பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 520 கோடி ரூபாய் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. முறையாக ஏலம் விடாமல் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான நிறுவனத்திற்க முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏலம் விடப்பட்டு இதுவரை இந்த நிறுவனம் எந்த பணிகளையும் தொடங்கவில்லை என குற்றம்சாட்டி ஆச்சாம்பட்டி கிராம மக்கள் திரண்டுவந்து, செங்கிப்பட்டி - புதுக்கோட்டை சாலையில் ஆடுகளுடன், சாலையில் அமைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஏலத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த நிறுவனத்திற்கு மீண்டும் மறுஏலம் வழங்க வேண்டும், உடனடியாக சேதமடைந்த சாலைகளை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.