தஞ்சையில் கொரோனா பரிசோதனை முடிவுகளில் குளறுபடி
தஞ்சையில் கொரோனா பரிசோதனை முடிவுகள் குளறுபடிகளாக உள்ளது. இதனால் நோயாளிகளா, சிகிச்சைக்கு செல்ல வேண்டுமா என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிகிறது. ஒரு நாள் தொற்று என்பது 30,000 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்றால் 44,093 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 493 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாள் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியே உள்ளது. மேலும் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 5,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் கடந்த 22 ஆம் தேதி தஞ்சாவூர் அருகே உள்ள 8 மணகரம்பை பகுதியை சேர்ந்த மதுசேகர், ஷோபனா ஆகிய இரண்டு பேர் பரிசோதனை செய்துள்ளனர். இதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சுகாதார துறையினர் மதுசேகரை மட்டும் தொடர்பு கொண்டு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அருகில் உள்ள சிகிச்சை மையத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட ஷோபானாவிற்கு நான்கு நாட்கள் ஆகியும் அழைப்பு வரவில்லை, இதனால் அவரின் உறவினர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது தங்களுக்கு ஷோபனா பாதிக்கப்பட்டது போல் எந்த முடிவுகளும் வரவில்லை என கூறியுள்ளனர்.
இருப்பினும் ஷோபனாவின் தொலைபேசி எண்ணை கொண்டு சோதனை செய்து போது அதில் தொற்று உறுதி என முடிவுகள் வந்துள்ளது. இதுவரை சுகாதார அதிகாரிகள் ஷோபனவை தொடர்பு கொள்ளாததால், தொற்று பாதிக்கப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.
இதுபோல் கொரோனா முடிவுகளின் குளறுபடியால் பொதுமக்கள் பாதிக்கபடுவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.