சுத்தமான குடிநீர் கேட்டு திருவையாறில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருவையாறில், பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-01-11 11:00 GMT
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சி.பி.எம். கட்சியினர்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு பேரூராட்சி அலுவலகம் எதிரில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் பிரதீப்ராஜ் குமார் தலைமையில் இன்று, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனி அய்யா, ராம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.  கிளைச் செயலாளர்கள் விஜயகுமார், சுமிதா, மணிகண்டன், சிஐடியு சௌந்தர்ராஜன், கோவிந்தராஜ், மூத்த தோழர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து அசுத்தமாக வரும் குடிநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜா நகர் பகுதியில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும். அந்தணர் குறிச்சி, திருமலைகார்டன், பாலாஜிநகர், யசோதாநகர் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் அமைத்து தரவேண்டும். சுடுகாடு, இடுகாடு பகுதியை சுத்தம் செய்வதுடன் மின்சார சுடுகாடு அமைத்து தரவேண்டும். அந்தணர் குறிச்சி ஆதி திராவிடர் (பழந்தமிழர்) பகுதியில் தினமும் குப்பை அள்ளுவதை உறுதி செய்ய வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

Tags:    

Similar News