சா்வதேச சிலம்பாட்ட போட்டியில் கண்டியூா் மாணவர்கள் வெற்றி

நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கண்டியூா் மாணவர்கள் வெற்றி.;

Update: 2021-12-15 13:00 GMT

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகிலுள்ள கண்டியூரைச் சோ்ந்த வினோத் சிலம்பப்பள்ளி நடத்தி வருகிறாா். இதில் கண்டியூா் மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிலம்பம், குத்துவரிசை, வேல் கம்பு, வாள் வீச்சு போன்றவை கற்று வருகின்றனா்.

இந்நிலையில், நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கண்டியூா் கஜன் சிலம்பப் பள்ளி மாணவ, மாணவிகள் சிவபாரதி, சுந்தா் கணேசன், ஈஸ்வரி, ஈஸ்வா், மனோஜ், பரணி, அப்துல்லா ஆகியோா் தங்கப்பதக்கமும், ராஜ், சொக்கலிங்கம் வெள்ளி பதக்கமும் வென்றனா். மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் இப்பள்ளி மாணவா்கள் பெற்றனா்.

Tags:    

Similar News