நேரடி நெல் கொள்முதல் நிலையம்- நவீன அரிசி ஆலைகளில் அமைச்சர் ஆய்வு

கொள்ளமுதல் செய்யும் நெல்லை அரிசியாக மாற்றி பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைப் படுத்தப்படும்

Update: 2021-10-08 09:15 GMT

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையம் மற்றும் நவீன அரிசி ஆலைகளா ஆய்வு  மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக நெல் கொள்முதல் செய்யும் பணிகளையும், அம்மன் பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நவீன அரிசி ஆலையையும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சை மாவட்டத்தில் 259 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்யும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 

நிகழ் ஆண்டில், இலக்கை விஞ்சி குறுவை சாகுபடி நடைபெற்றுள்ள நிலையில், விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விரைந்து நெல்லை கொள்முதல் செய்யவும், அதனை பாதுகாப்பாக கிடங்குகளில் சேமிக்கவும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 259 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நாளொன்றுக்கு 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.

நேரடி கொள்முதல் நிலையத்தில் குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் நடைபெற்று வருகிறது.  கொள்முதலை தீவிரப்படுத்தும் விதமாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விவசாயிகள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று நடமாடும் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல்லின் ஈரப்பதம் உலர்த்துவதற்க்கு தேவையான உலர் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. விவசாயிகள் அதை பயன்படுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. நெல்லின் ஈரப்பதம் 17% லிருந்து 20% வரை தளர்த்துவது குறித்து,  ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லை அரிசியாக மாற்றி, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த  அரசு ஆலோசனை செய்து வருகிறது என்றார் அமைச்சர் சக்கரபாணி.

Tags:    

Similar News