திருக்காட்டுப்பள்ளி அருகே மாட்டுக்கொட்டகையில் புகுந்த முதலை

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மாட்டுக்கொட்டகையில் புகுந்த முதலையால் பரபரப்பு நிலவியது.;

Update: 2022-03-09 13:15 GMT

நாகாச்சிபிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மாட்டுக்கொட்டகை பகுதிக்கு வந்த முதலை.  

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நாகாச்சிபிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலகுமார். விவசாயி. இவருடைய வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக்கொட்டகையில்  அதிகாலை 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று புகுந்து விட்டது.

இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று முதலையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். முதலை அருகில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து மாட்டுக்கொட்டகைக்குள் புகுந்திருக்கும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News