தியாகராஜரின் 174வது ஆராதனை விழா

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜரின் 174 ஆவது தின விழாவினை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.

Update: 2021-01-18 07:15 GMT



சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 174வது ஆராதனை விழாவினை முன்னிட்டு இன்று பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜரின் 174 ஆவது ஆராதனை விழா வருகிற பிப்ரவரி 1 மற்றும் 2 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. தெலுங்கு கீர்த்தனைகள் பாடி புகழ் பெற்ற ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா ஆண்டுதோறும் காவிரிக்கரையில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும், இந்த ஆண்டு தடை உத்தரவு காரணமாக ஐந்து நாட்கள் நடைபெற வேண்டிய விழாவானது இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை 2ஆம் தேதி காலை 10 மணிக்கு அவரது சமாதி எதிரே நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் ஒரே கீர்த்தனைகளைப் பாடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Similar News