தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உரிய ஆவணம் இன்றி ரூ 2 லட்சத்து 39 ஆயிரம் எடுத்து வந்ததை தேர்தல் பறக்கும்படையினர் பிடித்து திருவையாறு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை, தொடர்ந்து அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும்படை தேர்தல் நிலைக்குழு மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கஜேந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலன், கௌதம், பிரபாகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது செங்கிப்பட்டியில் இருந்து கந்தர்வக்கோட்டை நோக்கி வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் அந்த காரில் இருந்தவர்கள் தாங்கள் திருச்சியில் இருந்து வருவதாகவும், காரை ஓட்டி வந்தவர் கந்தர்வகோட்டை மஞ்சம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் முருகேசன் என்பதும் இவர் பிசினஸ் கரஸ்பாண்டன்சாக உள்ளார் என்றும் ,இவர் திருச்சியில் உள்ள பல ஏடிஎம்களில் மொத்தம் ரூ 2 லட்சத்து 39 ஆயிரம் எடுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாத காரணத்தினால் அந்த பணத்தை பறிமுதல் செய்து, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியனிLம் வழங்கி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.