தைஅமாவாசை - தர்ப்பணம் செய்ய தடை

Update: 2021-02-10 06:45 GMT

திருவையாறில் நாளை (பிப் 11 ம் தேதி) தை அமாவாசையை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவேரி ஆற்று படித்துறையில் குளிக்கவும், தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு வந்து திருவையாறு காவேரி ஆற்று புஷ்ப மண்டப படித்துறையில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்து, ஐயாறப்பரை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகமாகி உள்ள காரணத்தினால் பொதுமக்கள் நலன் கருதி, திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவையாறு பகுதிகளில் உள்ள காவேரி ஆற்று படித்துறைகளில் குளிப்பதற்கும், தர்ப்பணம் செய்வதற்கும் தடைவிதித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் யாரும் திருவையாறுக்கு நீராடவோ, தர்ப்பணம் செய்யவோ வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News