பாரம்பரிய முறைப்படி பொங்கல் திருவிழா

சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.

Update: 2021-01-18 12:00 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வளம்பகுடி கிராமத்தில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் திருவிழாவில் ஊர் மக்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். இதில் மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோர் ஊர் மக்களுடன் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். பின்னர் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Similar News