51 வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
மாணவர்களுக்கான இல்லம் தேடி கல்வி திட்டம் 48 அவசர சிகிச்சை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சை மாநகராட்சி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 51 பேரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இருவேறு இடங்களில் பிரசாரம்.
தஞ்சையில் 51 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கல்லுக்குளம் மற்றும் கீழவாசல் ஆகிய பகுதிகளில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கொரோனா முதலாவது அலை வரும் பொழுது அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது ஒரு கோடி தடுப்பூசி தான் போடப்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்ற எட்டு மாதத்தில் திமுக அரசு 10 கோடி தடுப்பூசி போட்டு உள்ளது.
தடுப்பு ஊசி போட்டதால் தான் மூன்றாவது அலையை நம்மால் எளிதாகக் கடக்க முடிந்தது. உங்களைத் தேடி மருத்துவத் திட்டம் மூலம் 50 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்திம், 48 அவசர சிகிச்சை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில். தமிழகத்தில் திமுக உள்ளவரை எந்த ஒரு கட்சியும் அங்கு ஆட்சியை பிடிக்க முடியாது என பேசி இருக்கிறார். அந்த அளவிற்கு பாசிச பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறது திமுக.
அப்போது உதயநிதி ஸ்டாலினிடன், தஞ்சை 32வது வார்டு பகுதியைச் சேர்ந்த தங்கம்மா என்பவர் தங்களது நகைக்கடன் இன்னும் தள்ளுபடி ஆகவில்லை என கூறினார். அதற்கு பதிலளித்த அவர், மனு கொடுங்கள் நடவடிக்கை எடுப்படும் என்றார் உதயநிதிஸ்டாலின். மேலும், கவிதா என்ற பெண்மணி 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் நிதி உதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.