பொது வேலை நிறுத்தத்தால் பஸ்களில் இடம் பிடிக்க பொதுமக்கள் போட்டா போட்டி

பொது வேலை நிறுத்தத்தால் தஞ்சையில் பஸ்களில் இடம் பிடிக்க பொதுமக்கள் போட்டா போட்டி போட்டு ஏறினார்கள்.

Update: 2022-03-28 05:00 GMT

தஞ்சை பஸ் நிலையத்தில் பயணிகள் போட்டி போட்டு பயணிகள் பேருந்துகளில் ஏறினார்கள்.

மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மார்ச் 28 மற்றும் 29 இரண்டு நாள்கள் நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் தொடங்கியது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் ஆட்டோக்கள், டாக்சிகள், சரக்கு வாகனங்கள் ஓடவில்லை .ஒரு சில அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகள் மட்டுமே ஓடுகிறது.

இதனால் இன்று காலை பள்ளி மற்றும் கல்லூரி செல்லக்கூடிய மாணவ மாணவிகள் வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் மணிக்கணக்கில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இயக்கப்பட்ட ஒருசில பேருந்துகளிலும் இடம் பிடிப்பதற்காக மாணவ மாணவிகளும் பொதுமக்களும் ஓடிச்சென்று பேருந்துகளில் இடம்பிடிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டது. இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை திருவையாறு உள்பட மாவட்டம் முழுவதும் 48 மணி நேர பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது 60 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை.

Tags:    

Similar News