பாலியல் தொல்லையால் இளம் பெண் தற்கொலை, 3 பேர் கைது

தஞ்சாவூர் அருகே இளம் பெண் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

Update: 2021-07-07 05:00 GMT

தஞ்சாவூர் அருகே இளம் பெண் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் வெளிநாட்டில் இருப்பதை பயன்படுத்தி இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை. தொல்லை தாங்க முடியாமல் இளம் பெண் தற்கொலை, சிறுவன் உட்பட மூன்று பேர் கைது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனுக்கும் (32), பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த துரை என்பவரின் மகள் தமிழழகி என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. பாலமுருகன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

தமிழழகி ஆவணத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு தமிழழகி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் அவரது சடலத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இளம் பெண் திருமணமாகி மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது என்பதால் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் ஆகியோர் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினர்.

சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், இச்சம்பவத்தில் அதேபகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தமிழழகியின் கணவர் வெளிநாட்டில் இருந்து வரும் நிலையில் தமிழழகியின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவருக்கு கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாகவே, தமிழழகி தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர்.

மேலும், அவர் இதுதொடர்பாக தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களின் பெயர்களை கடிதம் ஒன்றில் எழுதி வைத்திருந்ததாகவும், தற்கொலை செய்து கொண்ட தமிழழகியின் செல்போன் மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாலியல் குற்றவாளிகளின் பெயருடன் கூடிய கடிதத்தை காவல்துறையினர் வெளியிட மறுப்பதாகவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

மேலும், குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே சடலத்தை பெற்றுக் கொள்வோம் என மூன்று நாட்களாக அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மணிகண்டன், ஆகாஷ் மற்றும் மைனர் சிறுவன் விக்னேஷ் ஆகிய மூன்று இளைஞர்களை திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்து மூன்று தினங்களாக உடற்கூறு செய்யப்பட்டு பேராவூரணி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த தமிழழகியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுச் சென்று அடக்கம் செய்தனர்.

Tags:    

Similar News