உர விலையை கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

தற்போது டெல்டா மாவட்டம் முழுவதும் கடுமையாக மழை பெய்துள்ள நிலையில், உரத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது

Update: 2021-12-15 08:00 GMT

பைல் படம்

மத்திய அரசு, உரத்திற்கான மானிய விலையை குறைத்தால் பொட்டாஷ் உரம் உயர்வு. உடனடியாக விலையை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை .

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் பத்து லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடவு செய்யப்பட்டு 40 நாட்களில் இருந்து 80 நாட்கள் வரை, மேலுரமாக பொட்டாஷ், யூரியா போன்ற உரங்கள் இட வேண்டும், தற்போது டெல்டா மாவட்டம் முழுவதும் கடுமையாக மழை பெய்துள்ள நிலையில், உரத்தின் தேவை என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  பொட்டாஸ் ஏக்கருக்கு ஒரு மூட்டை இட வேண்டும். கடந்த காலங்களில் பொட்டாஷ் உரம் 1,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது மத்திய அரசு 900 ரூபாய் மானியம் வழங்கியது. ஆனால் தற்போது மானியத்தை 300 ரூபாயாக மத்திய அரசு குறைத்து விட்டதால், உர விலை 700 ரூபாய் விலை உயர்ந்து 1700, 1750 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல பகுதிகளில் பொட்டாஷ் உரம் கிடைக்காமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மீண்டும் மானிய தொகையை உயர்த்தி உர விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags:    

Similar News