பெரும் விபரீதம் ஏற்படும் முன் போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும்

பாலம் உள்வாங்கி தண்ணீர் வடியும் குழாய்களும் சேதம் அடைந்துள்ளதால், ஊருக்குள் நீர்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது;

Update: 2021-11-08 07:45 GMT

பேராவூரணி அருகே மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்,

பழுதடைந்துள்ள கட்டாறு தரை பாலம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் போகுவரத்து தடை செய்து புதிய பாலம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரை நூற்றாண்டு கடந்த செல்வவிநாயகபுரம் காட்டாறு தரை பாலம் கடந்த 2ஆம் தேதி மழை நீரில் மூழ்கியது. இதனால் மூன்று இடங்களில் வெடிப்பு ஏற்பட்டு பாலம் உள்வாங்கியது. மேலும் தண்ணீர் வடியும் குழாய்களும் சேதம் அடைந்துள்ளதால், தண்ணீர் சீராக செல்ல முடியாமல் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



பேராவூரணியின் முக்கிய வழித்தடமாக உள்ள இந்த பாலம் வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், பேருந்தகள், தனியார் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

எனவே எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இப்பாலத்தில், கனரக வாகனங்கள், பேருந்து போக்குவரத்து ஆகியவற்றிற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்.

பெரும் விபத்து ஏற்படும் முன்பு புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News