கவலைப்படாதீங்க நான் வந்துருவேன், தொண்டரிடம் பேசிய சசிகலா

தஞ்சாவூர் அதிமுக தொண்டரிடம் சசிகலா போனில் பேசினார். இதில் அந்த தொண்டர் மகிழ்ச்சியடைந்து உற்சாகமானார்.

Update: 2021-05-31 02:30 GMT

சசிகலா (பைல் படம்)

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் வினோத் சுரேஷ். இவர் தீவிரமான அதிமுக தொண்டர். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இணைந்து தீவிரமாக கட்சி பணியாற்றி தற்போது ஒன்றிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை கண்ட வினோத் சுரேஷ் மன இருக்கத்துடன் இருந்துள்ளார். இந்த நேரத்தில் சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலா நேற்று வினோத் சுரேஷ்டம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரின் குடும்ப நலம் மற்றும் உடல் நலம் விசாரித்து விட்டு கவலைப்படாமல் இருங்கள் கொரோனா காலம் முடிந்தவுடன் வந்து விடுவேன் என கூறியுள்ளார்.

இதை கேட்ட தொண்டர் மகிழ்ச்சியடைந்தார். சசிகலா, வினோத் சுரேஷிடம் தொலைபேசியில் பேசிய நிகழ்வை அடுத்து உற்சாகமடைந்த இவர் சசிகலாவின் படத்தை தனது வீட்டில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்..

Tags:    

Similar News