தஞ்சாவூரில் மனநலம் பாதித்தவர்களுக்கு உணவு வழங்கும் இளைஞர்
தஞ்சாவூர் மாவடத்தில் ஆதவற்ற மற்றும் மனநலம் பாதித்தவர்களுக்கு இளைஞர் ஒருவர் உணவு வழஙகி வருகிறார்;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் வசித்து வருபவர் ரகு. இவர் டாட்டூ எனப்படும் பச்சை குத்தும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு அமுலில் இருந்து வருவதால் ஆதரவற்றவர்கள், மனநோயாளிகள் என ஏராளமானோர் உணவின்றி தவித்து வருவதை கண்டு அவர்களுக்கு உணவளிக்கும் வகையில் இவர் தினந்தோறும் உணவு பொட்டலங்களை பட்டுக்கோட்டையிலிருந்து தனது காரில் எடுத்து சென்று கொடுத்து வருகிறார்.
பாப்பாநாடு, ஒரத்தநாடு வழியாகச் சென்று தஞ்சை புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் என 50 கிலோமீட்டர் தூரம் வரை சென்று அப்பகுதிகளில் உள்ள ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளித்து வருகிறார்.