நசுவினி ஆற்றில் மாவட்ட ஆட்சியர்- பேரிடர் மீட்பு கண்காணிப்பு அதிகாரி ஆய்வு.

நசுவினி ஆற்று கரைகளை பலப்படுத்தி உடைப்பெடுக்காதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

Update: 2021-11-10 13:45 GMT

நசுவினி ஆற்றில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரிடர் மீட்பு மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆகியோர் ஆய்வு. செய்தனர்

தஞ்சை மாவட்டம்,  அதிராம்பட்டினம் நசுவினி ஆறு கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையினால் தற்பொழுது கரை தெரியாத அளவிற்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த ஆறு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பெய்த தொடர் மழையினால் கரைகள் உடைப்பெடுதது கருங்குளம், மங்கனங்காடு, கரிசக்காடு மற்றும் முடுக்குக்காடு, அதிராம்பட்டினம் கரையூர்தெரு ஆகிய பகுதிகளுக்குள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயினர். இதனை அடுத்து ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் இந்த நசுவினி ஆற்று கரைகளை பலப்படுத்தி உடைப்பெடுக்காதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனையடுத்து இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பேரிடர் மீட்பு மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் நசுவினி ஆற்றுப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதா என கேட்டறிந்தனர். மேலும் பொதுப்பணித் துறை ,நெடுஞ்சாலைத் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அறிவுரை வழங்கினர். இதேபோல கொள்ளுக்காடு மற்றும் மதுக்கூர் பெரியகோட்டை கண்ணன் ஆற்றுப்பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News