புதிய நகராட்சியான அதிராம்பட்டினத்தை முழுமையாக கைப்பற்ற அதிமுக தீவிரம்
புதிய நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள அதிராம்பட்டினத்தை முழுமையாக கைப்பற்ற அதிமுக தீவிரம் காட்டி வருகின்றது.;
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற ஜனவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறியதையடுத்து, அதிமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பேரூராட்சியாக இருந்த அதிராம்பட்டினம் அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிராம்பட்டினம் நகராட்சியில் 27 வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 27 வார்டுகளை முழுமையாக கைப்பற்ற அதிமுக தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.