தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பத்திற்கு வட்டார மருத்துவர் உதவி

தீ விபத்தில் வீடு இழந்து தவித்த இளம் தம்பதியருக்கு, குடிசை வீடு கட்டி கொடுத்து, வீட்டிற்குத் தேவையான பொருட்களை சீராக கொடுத்து, புதுமனை புகுவிழா நடத்தி கொடுத்த வட்டார மருத்துவ அலுவலர்.;

Update: 2021-07-04 07:45 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம் கிராமத்தில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு கூலி தொழிலாளியான பாலமுருகன் - கமலம் தம்பதியரின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் வீடு முற்றிலும் எரிந்து அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது. ‌‌இதனால்.பாலமுருகன் - கமலம் தம்பதியினர், சிறு குழந்தையை வைத்துக் கொண்டு வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜன் தலைமையில் மருத்துவ முகாம் அப்பகுதியில் நடைபெற்ற பொழுது,, பாலமுருகன் வீடி இல்லாமல் தவித்து வருவது கேள்விப்பட்ட மருத்துவர் சவுந்தரராஜன், அங்கு சென்ற அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, வீடு கட்டி தருவதாகவும் உறுதியளித்தார். இதனையடுத்து மருத்துவர் தனது சொந்த செலவில் குடிசை வீடு ஒன்று கட்டிக்கொடுத்து, அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், இன்று அந்த ஏழைத் தம்பதியினருக்கு வீட்டிற்கு தேவையான பீரோ, சேர், புத்தாடைகள், மற்றும் இதர பொருட்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் சுகாதார பணியாளர்களுடன் அவற்றை சீர்வரிசையாக எடுத்துச்சென்று வட்டார மருத்துவ அலுவலர் சௌந்தரராஜன் அந்த தம்பதியருக்கு வழங்கி கிரகப்பிரவேசத்தையும் நடத்தி வைைத்தார்‌.

இதனால் அந்த தம்பதியினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவரின் இந்த செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஏற்கனவே இதுபோல் மருத்துவர் பல பேருக்கு வீடு கட்டி உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News