மஞ்சப்பை விழிப்புணர்வு சட்டம் : பொருள்களை துணிபைகளில் வாங்கி செல்லும் பொதுமக்கள்

பொதுமக்கள் மஞ்சள்பை மற்றும் துணிப்பைகளை எடுத்துச் சென்று பொருட்களை வாங்கிச் செல்வது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Update: 2022-01-01 16:15 GMT

பாபநாசம் பகுதிகள் பொதுமக்கள் மஞ்சள்பைகள் மற்றும் துணிப்பைகளை எடுத்துச்சென்று பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்

வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கடைகளில் இருந்து பொதுமக்கள் பாலித்தீன் பைகளில் வாங்கி எடுத்துச் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், பல ஆண்டுகாலம் பாலித்தீன் பைகள் பூமியில் மக்கா குப்பைகளாக இருந்து வருவதாகவும், ஆகையால் பழைய முறைப்படி பொதுமக்கள் துணிப்பைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என கூறி, தமிழக அரசு பாலித்தீன் பைகளை தடை செய்தது. 

இதனால் பாபநாசம் சுற்றியுள்ள பகுதிகளான மருந்தகங்கள், பலசரக்குக் கடைகள், காய்கறி கடைகள், உணவகங்கள், பேக்கரிகள் உட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மஞ்சள்பைகள் மற்றும் துணிப்பைகளை எடுத்துச்சென்று பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இது காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News