பாபநாசம் மனவளக்கலை மன்றத்தில் உலக நல வேள்வி விழா
மனவளக்கலை பேராசிரியர் தாராசுரம் லெட்சுமணன் கலந்து கொண்டு ஆலயம் தொழு தலைப்பில் சிறப்புரையாற்றினார்;
பாபநாசம் திருப்பாலத்துறை வாணிய தெருவில் அமைந்துள்ள பாபநாசம் மனவளக்கலை மன்ற யோக மையத்தில் உலக நல வேள்வி விழா நடைபெற்றது. கோகிலவாணி, மீனா ஆகியோர் இறைவணக்கம், குருவணக்கம் பாடல்கள் பாடினார்கள். பொறுப்பாசிரியர் தமிழரசன் வரவேற்று பேசினார். விழாவில் மனவளக்கலை பேராசிரியர் தாராசுரம் லெட்சுமணன் கலந்து கொண்டு ஆலயம் தொழு தலைப்பில் சிறப்புரையாற்றினார். பஞ்சபூத நவகிரக தவம் நடைபெற்றது ஏற்பாடுகளை பாபநாசம் மனவளக்கலை மன்ற யோகா தவ மையத்தினர் செய்திருந்தனர். ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் பாஸ்கர் நன்றி கூறினார்.