பாபநாசம் வட்டாரத்தில் வீட்டு காய்கறி தோட்டம் விதை வழங்கும் விழா
கும்பகோணம் அருகே, பாபநாசம் வட்டாரத்தில் வீட்டு காய்கறி தோட்டம் விதை வழங்கும் விழா நடைபெற்றது.;
ஆதனூர் கிராமத்தில், காய்கறித் தோட்டத்துக்கு விதை,செடிகள் வழங்கப்பட்டன.
கும்பகோணம் அருகே, பாபநாசம் வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, ஊட்டச்சத்து தளைகள் மற்றும் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு, விதை வழங்கும் விழா ஆதனூர் கிராமத்தில் நடைபெற்றது.
மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாபநாசம் தோட்டக்கலை உதவி இயக்குனர் கனிமொழி கூறியதாவது: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 75% மானியத்தில் ஊட்டச்சத்து தளைகள் கொண்ட 8 வகை செடிகள் மற்றும் 12 வகை காய்கறி விதைகள் கொண்ட தொகுப்பு பாபநாசம், அம்மாபேட்டை மற்றும் திருவையாறு வட்டாரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள், ஆதார் மற்றும் புகைப்பட ஆவணங்களுடன், அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி ஊட்டச்சத்துகள் மற்றும் விதைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆதனூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சித்ரா மகாலிங்கம், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கார்த்திகேயன், காந்தி, பிரதீபா ஆகியோர் கலந்து கொண்டனர்.