உபி விவசாயிகள் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவம்: இந்திய கம்யூனிஸ்ட் நூதன போராட்டம்

பிரேதத்தைப் போல ஒரு விவசாயியை ஒப்பனை செய்து அவரை கையில் ஏந்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூதனப் போராட்டம் நடத்தியது;

Update: 2021-10-06 03:00 GMT

 உபி விவசாயிகள் படுகொலையைக்கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் நடைபெற்ற நூதனப்போராட்டம்

போராடிய விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி 8 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கையில் பிரேதத்தைப் போல ஒரு விவசாயியை ஒப்பனை செய்து  அவரை கையில் ஏந்தி நூதன முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது அமைச்சர் மகனின் வாகனம் ஏற்படுத்திய விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்தும், விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  பிரேதம் போல ஒரு விவசாயியை ஒப்பனை செய்து  அவரை  கையில் ஏந்தி நூதன முறையில் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

Tags:    

Similar News