பாபநாசத்தில் பாம்பு கடித்து தமாகா நிர்வாகி பலி

பாபநாசத்தில் பாம்பு கடித்து தமாகா நிர்வாகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-13 04:19 GMT

பாம்பு கடித்து பலியான தமாக நிர்வாகி ராமதாஸ்  

பாபநாசம் மேலகஞ்சிமேடு பகுதியில் வசித்து வந்தவர் ராமதாஸ் (72) விவசாயி.  இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். கடந்த 8ம் தேதி அன்று காலையில் தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது வலது காலில் கட்டுவிரியன் பாம்பு கடித்தது. உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 12ம் தேதி காலையில் இறந்து விட்டார்.இதுகுறித்து அவரது மனைவி மாலா (65) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News