தஞ்சாவூர்: அய்யம்பேட்டையில் ரேசன் அரிசி 18 மூட்டைகள் பறிமுதல்
அய்யம்பேட்டையில் ரேசன் அரிசி 18 மூட்டைகள் பறிமுதல்;
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பாப்பா வாய்க்கால் தெருவில் உள்ள ஒரு ரைஸ்மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாபநாசம் தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாசில்தார் மதுசூதனன், வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ரைஸ் மில்லுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது 18 ரேசன் அரிசி மூட்டைகளும், ரேசன் அரிசியை குருணையாக அரைத்து 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தஞ்சை குடிமைப்பொருள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த குடிமைப்பொருள் அதிகாரிகள் ரேசன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி பாபநாசம் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரேசன் அரிசி மூட்டைகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்திய சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.