தஞ்சாவூர்:பாபநாசத்தில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

பாபநாசத்தில் அ.ம.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா;

Update: 2022-02-25 12:45 GMT

பாபநாசத்தில் பழைய அண்ணாசாலை முன்பு ஒன்றிய பேரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. பாபநாசம் பேரூர் செயலாளரும், பேரூராட்சி கவுன்சிலருமான பிரேம்நாத் பைரன் தலைமை வகித்து ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், மகேந்திரன், மாவட்ட தொழிற்சங்க தலைவர் திவாகரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அன்பழகன், பாபநாசம் ஒன்றிய கவுன்சிலர் சரவணன் பாபு, பேரவை செயலாளர் குமார், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News