சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
பாபநாசத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வட்டாட்சியர் நடவடிக்கை;
பாபநாசத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வட்டாட்சியர் நடவடிக்கை
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார் வந்ததையடுத்து, அவரது உத்தரவின் பேரில், பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், பாபநாசம் பேரூராட்சி காணியாளர் தெருவில் உள்ள எலும்பு முறிவு கட்டு வைத்தியர் செல்லமுத்து என்பவரது வீட்டுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததில், அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்காதது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு எச்சரித்ததுடன், அவருக்கு ரூ10 ஆயிரம் அபதாரம் விதித்தார்.