பாபநாசம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் - வாலிபர் கைது
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்தப்பட்டு, இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர், பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருக்கருகாவூர் வெட்டாறிலிருந்து அரசு அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த போது சோதனை செய்தனர்.
பின்னர் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்த பாபநாசம் போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தி வந்த கரம்பத்தூர் தீபக் (20) என்ற வாலிபரை கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.