பாபநாசத்தில் சாலை மறியல் போராட்டம் :50 பேர் கைது

கன மழையால் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வழங்க வலியுறுத்தி பாபநாசத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.;

Update: 2022-01-04 16:45 GMT

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாபநாசம் ஒன்றிய குழு சார்பில் கன மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 30 ஆயிரம் வழங்கிட வேண்டும். கடும் மழை வெள்ளம் பாதிப்பிற்கு தமிழக அரசு கோரியுள்ள நிவாரண நிதியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும்.

பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வலியுறுத்தியும் பாபநாசம் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் பாபநாசம் அண்ணாசிலை அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர் சாமி தர்மராஜன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பரமசிவம் உட்பட சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர்களை பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News