பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம்
பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் அரசு திட்ட பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.;
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் மண்டல அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருமான ரெங்கராஜன் தலைமையில் அரசு திட்ட பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் அரசாணைகள் 34, 644, இணையவழி சான்றுகள், உட்பிரிவு மற்றும் உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் இனங்கள், சமூக பாதுகாப்பு திட்ட பணி முன்னேற்றம் ஆகியவை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியர்கள் விநாயகம், பிரியா, நில அளவை துறை வட்ட ஆய்வாளர் பிரசாத், வருவாய் ஆய்வாளர்கள் வரதராஜன், சுகுணா, ஸ்ரீதேவி, செல்வராணி, சாந்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.