பாபநாசத்தில் மக்களை தேடி சிறப்பு முகாமில் மனுக்களை தந்த பொதுமக்கள்
பாபநாசத்தில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.;
தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா தலைமையில் நடைப்பெற்றது. கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் லதா வரவேற்றார். விழாவில் அரசு தலைமை கொறடா கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா, மாநில பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்துச்செல்வம், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி கண்ணதாசன், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்வன், பாத்திமாஜான் ராயல்அலி, மாவட்ட துணைச்செயலாளர் கோவி.அய்யாராசு, பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் காந்திமதி, கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்பாபு மற்றும் பலர் பேசினார்கள். தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் நன்றி கூறினார்.