உக்கடை ஊராட்சியில் மக்கள் நாடாளுமன்றம்: வேளாண் சட்டங்களை ரத்து செய்து தீர்மானம்

மோடி அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 23 முதல் 27 வரை தமிழத்தில் ஊர்கள் தோறும் மக்கள் நாடாளுமன்றம் நடைபெறுகிறது.

Update: 2021-08-24 11:43 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உக்கடை ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற கூட்டம் .

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உக்கடை ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பெகாஸ் மூலம் ஒட்டுகேட்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள், ரயில், வங்கி, காப்பீடு, ராணுவ தொழிற்சாலை தனியாருக்கு தருவது, நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை உடைத்து சிதைத்து வரும் மோடி அரசைக்கண்டித்து ஆகஸ்ட் 23 முதல் 27 வரை தமிழகம் முழுவதும், ஊர்கள் தோறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் சார்பில் மக்கள் நாடாளுமன்றம் நடைபெறுகிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த குடிமக்கள், தொழிலாளர்கள் விவசாயிகள் இளைஞர்- மாணவர், பெண்கள் கொண்ட மக்கள் நாடாளுமன்ற கூட்டம், உக்கடை ஊராட்சியில நடைபெற்றது. தேசிய கொடியை மூத்த தலைவர் ஏ.பால்சாமி ஏற்றிவைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. மக்கள் நாடாளுமன்ற அவை தலைவராக ஏ. அப்தூல்கபூர், அவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.

வேளாண் அமைச்சராக தேர்வு செய்யபட்ட எஸ். எம்.குருமூர்த்தி, மூன்று வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து அவையில் பேசினார். இதன் மீது, அவை உறுப்பினர்களான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர். செந்தில்குமார் கிளை செயலாளர் கே.லெட்சுமணன், கிளை நிர்வாகிகள் கே. சுதகார், எம்.சத்தியசிலன், எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் விவாதித்தனர். இதையடுத்து, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்து, ஒன்றிய அரசைக் கண்டித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, மக்கள்மநாடாளுமன்ற கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது.

.

Tags:    

Similar News