பண்டாரவாடை ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

பாபநாசம் அருகே பண்டாரவாடை ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.;

Update: 2021-12-16 01:34 GMT

பண்டாரவாடை ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

பாபநாசம் அருகே பண்டாரவாடை ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் தலைமை வகித்தார். பாபநாசம் வட்ட துணை ஆய்வாளர் பிரசாத் முகாமினை துவங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் பாத்திமாஜான் ராயல்அலி, ஒன்றிய கவுன்சிலர்கள் மணிமொழிதமிழ்வாணன், ரெஜியாபேகம் முகமது இப்ராஹிம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஹாஜாசெரீப், ஊராட்சி மன்ற தலைவர் மரியம் பீவி முஹம்மது மக்ரூப், துணைத் தலைவர் சுல்தானா அஷ்ரப்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கிராம மக்கள் சுமார் 60 நபர்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முகாமில் பாபநாசம் வருவாய் ஆய்வாளர் சரவணன், பண்டாரவாடை ஊராட்சியின் சுற்றுவட்டார கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் ஊராட்சி செயலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் பார்த்திபன், கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் மற்றும் வருவாய் துறையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News