பாபநாசம் அருகே இடி விழுந்து தீப்பற்றி எரிந்த தென்னைமரங்கள்; வீடும் சேதம்
பாபநாசம் அருகே இடி விழுந்து தென்னைமரங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
இடி விழுந்ததால் தீப்பற்றி எரியும் தென்னைமரம்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் மெலட்டூர், ஒத்தைத் தெருவைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் ராஜேந்திரன் என்பவரது ஓட்டுவீட்டில் மாலை சுமார் 5.45மணியளவில் இடி விழுந்தது. இதில், டிவி மற்றும் வீடு பகுதி சேதமடைந்துள்ளது.
மேலும் அருகிலுள்ள உதயகுமாருக்கு சொந்தமான இரண்டு தென்னை மரங்களிலும் இடி விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அனணத்தனர். இதுகுறித்து மெலட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.