பாபநாசம் உலகத் திருக்குறள் மையத்தின் திருவள்ளுவர் தின விழா
பாபநாசம் உலகத் திருக்குறள் மையம் சார்பில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.
பாபநாசம் உலகத் திருக்குறள் மையம் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது.
மையத் தலைவர் ஜெய. மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் ஜெயராமன், பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் கோடையிடி குருசாமி வரவேற்று பேசினார்.
விழாவில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கல்யாணசுந்தரம், பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு பூரணி ஆகியோர் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் மாவட்ட திமுக துணை செயலாளர் அய்யாராசு, பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், மையத் துணைத்தலைவர் ரகுபதி, மையத்தின் இணைச்செயலாளர் சிவராமன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரைமுருகன், சாரதா மகளிர் மன்ற தலைவி தில்லைநாயகி சம்பந்தம் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தஞ்சை மாவட்ட இணைச் செயலாளர் ஆசிரியர் பாவை சங்கர் நன்றி கூறினார்.