பாபநாசம் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் நகை திருட்டு: போலீஸ் விசாரணை

முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் நகை திருட்டு;

Update: 2022-02-02 01:15 GMT
பாபநாசம் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் நகை திருட்டு: போலீஸ் விசாரணை

திருடு நடந்த முன்னாள் எம்எல்ஏ மகன் வீடு

  • whatsapp icon

பாபநாசம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பெருமாங்குடியை சேர்ந்த வெங்கடாஜலம் நாட்டார். இவருடைய மகன் நடராஜன் (63) ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர். இவருக்கு பாபநாசம் அருகே பெருங்குடி, குடியான தெருவில் வீடு உள்ளது.

இவர் தனது வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று அங்குள்ள வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாங்குடியில் உள்ள அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்து  நடராஜன் பார்க்கும் பொழுது வீட்டினுள்ளே சாமி அறையில் வைத்திருந்த குலதெய்வ நகை, காசு மாலை, 3 பவுன் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. இதனுடைய மதிப்பு ரூ.45 ஆயிரம் ஆகும். இது குறித்து அவர் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்இன்ஸ்பெக்டர் இளமாறன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News