பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா தாலுகா அலுவலகம் சாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கோவி.அய்யாராசு ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், தியாக சுரேஷ்குமார், குமார், அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக.செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் கலந்து கொண்டு எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் ஒன்றிய குழு தலைவர்கள் சுமதி,கலைச்செல்வன், திமுக பேரூர் செயலாளர்கள் கபிலன், துளசி அய்யா, சீனிவாசன், சரவணன், பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் கமிட்டி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.