ராஜகிரி ஊராட்சியில் மின்சாரம் தாக்கி இறந்தது தேசிய பறவை மயில்
ராஜகிரி ஊராட்சியில் மின்சாரம் தாக்கி இறந்த மயில் வனகாப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.;
தஞ்சாவூர் பாபநாசம் தாலுகா ராஜகிரி ஊராட்சியில் சௌவுக்கத் பஜார் தெருவில் ஆண் மயில் டிரான்ஸ்பார்மர் செல்லும் மின்சார வயரில் அடிபட்டு கீழே விழுந்து இறந்து விட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் மூலம் மாவட்ட வனத் துறை அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு பாபநாசம் வனக்காப்பாளர் சண்முகவேல், பாபநாசம் வனவர் ராமர் ஆகியோரிடம் இறந்த ஆண் மயில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பாபநாசம் அரசலாறு ஆற்றங்கரையில் வனத்துறை ஊழியர்கள் மூலம் குழிதோண்டி புதைக்கப்பட்டது.