கும்பகோணம்: பாபநாசம் அருகே தகராறில் ஒருவர் கொலை
பாபநாசம் அருகே தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம், அய்யம்பேட்டையை அடுத்த பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (70). அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). தற்போது பசுபதிகோயிலில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளது. இந்நிலையில் பிச்சை பிள்ளை தனது செங்கல் சூளைக்கு, தனது வீட்டின் பின்புறமுள்ள நிலத்தில் மண்ணை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ், பிச்சைபிள்ளையிடம் அதிகமாக பள்ளம் ஏற்படும் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக, இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், ரமேஷ் அரிவாளால் பிச்சைபிள்ளை வலது கையில் வெட்டினார். இதனால் படுகாயமடைந்த பிச்சைபிள்ளையை அருகிலுள்ளவர்கள், அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே பிச்சை பிள்ளை இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.