பாபநாசம் பேரூராட்சியில் மாமியார்-மருமகள் போட்டி
பாபநாசம் பேரூராட்சியில் மாமியார், மருமகள் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் மாமியார், மருமகள் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பாபநாசம் பேரூராட்சியில் 10- வது வார்டில் ரேகா சதீஷ்குமார், அதிமுக சார்பில் போட்டியிட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுந்தரேசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இவர் அதிமுகவில் 10- வது வார்டு செயலாளராக இருந்து வருகிறார்.இவருடைய மாமியார் விஜயாள் 1-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் போட்டியிட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் இக்கட்சியில் பாபநாசம் மாதர் சங்க ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார்.