பாபநாசத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குறித்து ஆய்வுக்கூட்டம்

கும்பகோணம் அருகே, பாபநாசத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2021-12-24 19:45 GMT

 பாபநாசத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில்,  வருகிற 30ம் தேதி தமிழக முதலமைச்சர் பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இது  குறித்து பயனாளிகள் பட்டியல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட வருவாய் நீதிமன்றத்தின் தனித்துணை ஆட்சியர் ராம்குமார் தலைமையில் பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் சுஜாதா, மண்டல துணை வட்டாட்சியர் செந்தில்குமார், வட்ட துணை ஆய்வாளர் பிரசாத், வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாலசுப்பிரமணியன், வரதராஜர், ஸ்ரீதேவி, சுகுணா ஆகியோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுரையின்படி, 500 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, 500 பேருக்கு முதியோர் உதவி தொகை, 300 பேருக்கு குடும்ப அட்டை ஆகிய நலத்திட்ட உதவிகள் பயனாளிகள் பட்டியலை இறுதி செய்திடுமாறு,  துணை ஆட்சியரால் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News