பாபநாசம் பேரூராட்சியில் புதிய இறைச்சி மார்க்கெட்: எம்எல்ஏ ஜவாஹிருல்லா

பாபநாசம் பேரூராட்சியில் புதிய மீன், ஆடு, கோழி இறைச்சி மார்க்கெட் அமைக்கப்பட வேண்டும் என எம்எல்ஏ ஜவாஹிருல்லா பேட்டி.

Update: 2021-07-24 03:44 GMT

பாபநாசம் பேரூராட்சியில் புதிய இறைச்சி மார்க்கெட் அமைக்கப்பட வேண்டும் என பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பேட்டி.

பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவருமான பேராசிரியர் முனைவர் எம்.எச் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:

தலைமைச் செயலகத்தில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே. என்.நேரு அவர்களை நேரில் சந்தித்து பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்துள்ளேன். பாபநாசம் பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மீன், ஆட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளை விற்பனை செய்யும் மார்க்கெட் பகுதி சகிக்க முடியாத அளவில் குப்பைக் கூளமும் துர்நாற்றமும் வீசுகிறது.  எனவே, தற்சமயம் செயல்பட்டு வரும் பழைய மார்க்கெட் பகுதியை முற்றிலும் இடித்துவிட்டு புதிய கடைகள் கட்டி மிகவும் சுகாதாரமாக இயங்குவதற்கு வழிவகுக்க வேண்டும்.

அம்மாபேட்டை புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசம் நகரத்தில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, மீன் மார்க்கெட் மற்றும் கூட்டுறவு பண்டகசாலை, திருமண மண்டபம் போன்ற வணிகம் நிறைந்த பகுதியாக உள்ள பாபநாசம் கீழ வீதி மற்றும் வடக்கு வீதி சந்திப்பில் புதிதாக கோபுர மின் விளக்கு நிறுவப்பட வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறி உள்ளேன் என தெரிவித்தார்.



Tags:    

Similar News